TNPSC Thervupettagam

IFCN நிறுவனத்தின் உலகப் பால் பண்ணைச் செயற்பாட்டாளர்கள் தரவரிசை

December 7 , 2020 1369 days 480 0
  • பால்வள நிறுவனமான அமுல் நிறுவனமானது முன்னிலையில் உள்ள 20 உலகளாவிய பால் பண்ணைச் செயற்பாட்டாளர்களிடையே 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இது ஒரு ஆண்டில் மேற்கொள்ளப்படும் பால் கொள்முதலின் அளவைப் பொறுத்து மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • அமெரிக்காவின் பால் பண்ணை விவசாயிகள் இந்தப் பட்டியலின் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
  • இதற்கு அடுத்து நியூசிலாந்தின் போன்டெரா, பிரெஞ்சு நிறுவனமான குரூப்பி லாக்டாலிஸ், டென்மார்க் நாட்டின் அர்லா புட்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்தின் நெஸ்லே ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • அமுல் என்பது குஜராத்தின் ஆனந்த்தில் உள்ள ஒரு இந்தியப் பால்வள கூட்டுறவுச் சங்கமாகும்.
  • அமுல் நிறுவனமானது 1946 ஆம் ஆண்டில் சர்தார் வல்லபாய் படேலின் வழிகாட்டுதலின் பேரில் திரிபுவன்தாஸ் படேல் அவர்களால் தொடங்கப் பட்டுள்ளது.
  • அமுல் நிறுவனமானது இந்தியாவின் வெண்மைப் புரட்சிக்கு ஊக்கமளித்தது.
  • வெண்மைப் புரட்சி அல்லது வெண்மை (வெள்ளம்) நடவடிக்கையானது 1970 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.
  • இது இந்தியாவை உலகின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியாளர் நாடாக மாற்றியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்