சர்வதேச நிதியியல் சேவைகள் மையங்களில் (International Financial Services Centres - IFSC) வங்கியியல் கிளைகளை (International Banking Unit - IBU) வங்கிகள் அமைப்பதற்கான வரைமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது.
இந்த வங்கியியல் கிளைகள் சர்வதேச நிதியியல் சேவை மைய வங்கியியல் கிளைகள் என அழைக்கப்படுகின்றது.
இந்த மாற்றியமைக்கப்பட்ட வரைமுறைகளின் படி தாய் வங்கியானது அதன் வங்கியியல் கிளைகளுக்கு (IBU) குறைந்த பட்சம் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு இணையான வேற்று நாட்டு பணத்தை அனைத்து நேரங்களிலும் வழங்கி நிர்வகிக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளது.
இருப்பினும், IBUவின் வெளிப்பாடுகளுடன் (Exposures) சேர்த்து குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை மூலதனமானது தாய் வங்கியின் அளவில் நடப்பு செயல்பாட்டு அடிப்படையில் (on-going basis) நிர்வகிக்கப்பட வேண்டும்.
பொருளாதாரத் தேவை ஏற்படும் பொழுது IBUவிற்கு மூலதனம் / பணம் வடிவிலான நிதியியல் உதவியை அதிகப்படுத்துவதற்கான, Letter of comfort எனும் ஆவணத்தை தாய் வங்கி வழங்க வேண்டும்.
மத்திய அரசு, IFSCஐ, குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் குஜராத் சர்வதேச நிதியியல் தொழில்நுட்ப நகரம் எனும் பெயர் கொண்டு அமைத்துள்ளது.