TNPSC Thervupettagam

IFSC வங்கியியல் நிறுவனங்கள்

May 21 , 2018 2381 days 857 0
  • சர்வதேச நிதியியல் சேவைகள் மையங்களில் (International Financial Services Centres - IFSC) வங்கியியல் கிளைகளை (International Banking Unit - IBU) வங்கிகள் அமைப்பதற்கான வரைமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது.
  • இந்த வங்கியியல் கிளைகள் சர்வதேச நிதியியல் சேவை மைய வங்கியியல் கிளைகள் என அழைக்கப்படுகின்றது.

  • இந்த மாற்றியமைக்கப்பட்ட வரைமுறைகளின் படி தாய் வங்கியானது அதன் வங்கியியல் கிளைகளுக்கு (IBU) குறைந்த பட்சம் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கு இணையான வேற்று நாட்டு பணத்தை அனைத்து நேரங்களிலும் வழங்கி நிர்வகிக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளது.
  • இருப்பினும், IBUவின் வெளிப்பாடுகளுடன் (Exposures) சேர்த்து குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட ஒழுங்குமுறை மூலதனமானது தாய் வங்கியின் அளவில் நடப்பு செயல்பாட்டு அடிப்படையில் (on-going basis) நிர்வகிக்கப்பட வேண்டும்.
  • பொருளாதாரத் தேவை ஏற்படும் பொழுது IBUவிற்கு மூலதனம் / பணம் வடிவிலான நிதியியல் உதவியை அதிகப்படுத்துவதற்கான, Letter of comfort எனும் ஆவணத்தை தாய் வங்கி வழங்க வேண்டும்.
  • மத்திய அரசு, IFSCஐ, குஜராத் மாநிலத்தின் காந்திநகரில் குஜராத் சர்வதேச நிதியியல் தொழில்நுட்ப நகரம் எனும் பெயர் கொண்டு அமைத்துள்ளது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்