TNPSC Thervupettagam
September 18 , 2023 288 days 250 0
  • இந்தியா, சீனா, மலேசியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர்கள் குழுவானது இந்த ஆண்டிற்கான Ig நோபல் பரிசுகளை வென்றுள்ளனர்.
  • இந்தப் பரிசானது நகைச்சுவையான அறிவியல் சாதனைகளுக்காக, இயந்திர பொறியியல் பிரிவில் இறந்த சிலந்திகளைப் பிடிப்புக் கருவிகளில் பயன்படுத்தச் செய்வதற்கான ஆய்வுக்காக வழங்கப் பட்டது.
  • நோபல் பரிசின் ஒரு போலி வடிவமான Ig நோபல் பரிசு வழக்கத்திற்கு மாறான மற்றும் நகைச்சுவையான அறிவியல் சாதனைகளுக்காக வழங்கப் படுகிறது.
  • இது மக்களைச் சிரிக்க வைத்து, அறிவியலின் விசித்திரமான அம்சங்களைப் பற்றிச் சிந்திக்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • Ig நோபல் பரிசானது, குறிப்பிடத்தக்க சில அறிவுசார் சாதனைகளை கௌரவிக்கும் நோபல் பரிசு போலல்லாமல், ஆராய்ச்சியின் நகைச்சுவையான மற்றும் அசாதாரணமான அம்சத்தினைக் கொண்டாடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்