Igla-S சுமந்து செல்லக் கூடிய வகையிலான வான்வழி பாதுகாப்பு அமைப்பு
April 12 , 2024 227 days 164 0
இந்திய இராணுவம் ஆனது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 24 Igla-S மனிதனால் சுமந்து செல்லக்கூடிய வகையிலான வான்வழிப் பாதுகாப்பு அமைப்பின் (MANPADS) முதல் தொகுதியைப் பெற்றுள்ளது.
இந்திய இராணுவத்தின் மிகக் குறுகிய தூர வரம்புடைய வான்வழிப் பாதுகாப்பு (VSHORAD) திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த அமைப்பு வாங்கப் படுகிறது.
Igla-S அமைப்பு ஆனது ஓர் ஏவு வாகனம் மற்றும் ஓர் ஏவுகணையைக் கொண்டுள்ளது.
இதன் முதல் தொகுதியானது ரஷ்யாவிலிருந்து வழங்கப் பட்டுள்ளது என்ற நிலையில் மீதமுள்ள பாதுகாப்பு ஆயுத அமைப்புகள் ரஷ்யாவிலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் (ToT) மூலம் இந்தியாவில் தயாரிக்கப்படும்.