இந்திய அரசானது திறன்மிகு குறைதீர்ப்பு கண்காணிப்பு அமைப்பு (IGMS) 2.0 என்ற பொது குறைதீர்ப்பு இணைய தளம் மற்றும் கிளை கட்டமைப்பு கொண்ட வடிவிலான தானியங்கு பகுப்பாய்வு முகப்பு ஆகியவற்றினைத் தொடங்கியுள்ளது.
இம்முகப்புப் பக்கமானது, தாக்கல் செய்யப்பட்டு தீர்க்கப்பட்ட குறைகள், மாநிலம் மற்றும் மாவட்ட வாரியாகவும் அமைச்சகம் வாரியாகவும் தாக்கல் செய்யப்பட்ட குறைகள் குறித்தத் தரவுகள் ஆகியவை குறித்த உடனடிப் பகுப்பாய்வினை மேற் கொண்டு அட்டவணை வடிவிலான தரவுகளை வழங்குகிறது.
இது அதிகாரிகளுக்கு அந்தக் குறைகளின் மூல காரணத்தை கண்டறியவும் உதவச் செய்கிறது.
இது கான்பூரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தினால் செயல்படுத்தப் பட்டுள்ளது.