ஜவுளித்துறை செயலாளர், திரு. அனந்த்குமார் சிங் டெல்லியில் நடந்த இந்திய கைவினை மற்றும் பரிசுக் கண்காட்சியின் (Indian Handicraft and Gift Fair - IHGF) 45வது பதிப்பை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்திய கண்காட்சி மையத்தில் (India Expo-Centre and Mart) நடந்தது.
கைவினைப் பொருட்கள் துறையானது இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, கிராமப்புறம் மற்றும் பகுதியளவு நகரமாக (Semi-Urban) வளர்ச்சியடைந்த இடங்களில் அதிகளவில் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகிறது.
இது கலாச்சாரப் பண்பாட்டை பாதுகாப்பதோடு, கணிசமான அளவில் அந்நியச் செலாவணியை உருவாக்குகிறது.
IHGF ஆனது ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் (வசந்தகாலம் மற்றும் இலையுதிர் காலப் பதிப்புகள்) ஆசியாவின் மிகப்பெரிய கைவினைக் கண்காட்சியாகும்.
இந்தக் கண்காட்சி கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தால் (Export Promotion Council for Handi Crafts - EPCH) நடத்தப்பட்டது.