TNPSC Thervupettagam

IHGF டெல்லி கண்காட்சி (வசந்தகாலம்) 2018

February 27 , 2018 2334 days 730 0
  • ஜவுளித்துறை செயலாளர், திரு. அனந்த்குமார் சிங் டெல்லியில் நடந்த இந்திய கைவினை மற்றும் பரிசுக் கண்காட்சியின் (Indian Handicraft and Gift Fair - IHGF) 45வது பதிப்பை வெளியிட்டார்.
  • இந்நிகழ்ச்சி கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்திய கண்காட்சி மையத்தில் (India Expo-Centre and Mart) நடந்தது.
  • கைவினைப் பொருட்கள் துறையானது இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, கிராமப்புறம் மற்றும் பகுதியளவு நகரமாக (Semi-Urban) வளர்ச்சியடைந்த இடங்களில் அதிகளவில் கைவினை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குகிறது.
  • இது கலாச்சாரப் பண்பாட்டை பாதுகாப்பதோடு, கணிசமான அளவில் அந்நியச் செலாவணியை உருவாக்குகிறது.
  • IHGF ஆனது ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் (வசந்தகாலம் மற்றும் இலையுதிர் காலப் பதிப்புகள்) ஆசியாவின் மிகப்பெரிய கைவினைக் கண்காட்சியாகும்.
  • இந்தக் கண்காட்சி கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தால் (Export Promotion Council for Handi Crafts - EPCH) நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்