IIFL செல்வ ஹுருன் இந்தியா என்ற அமைப்பானது செல்வந்தர்கள் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் தொழில் துறையின் தலைவரான முகேஷ் அம்பானி தொடர்ந்து எட்டாவது ஆண்டாக செல்வம் மிக்க இந்தியர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் நிகர சொத்து மதிப்பு ரூ 3,80,700 கோடி ஆகும்.
இந்தப் பட்டியலில் ரூ 1,86,500 கோடி சொத்து மதிப்புடன் லண்டனைச் சேர்ந்த எஸ்பி இந்துஜா & குழுமமானது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் ரூ 1,17,100 கோடி சொத்து மதிப்புடன் விப்ரோ நிறுவனர் ஆசிம் பிரேம்ஜி மூன்றாவது இடத்தில் உள்ளார்.
நகரங்கள்
இந்தப் பட்டியலில் உள்ள 246 தனிநபர்கள் அல்லது 26 சதவீதம் பேர் தொழில்முனைவோருக்கு உகந்த நகரமாக மும்பையைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து இந்தப் பட்டியலில் டெல்லி (175), பெங்களூரு (77) ஆகிய நகரங்கள் தொழில்முனைவோருக்கு உகந்த நகரங்களாக உள்ளன.