புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகமானது (MoSPI), தொழில்துறை உற்பத்திக் குறியீட்டை (IIP) 42 நாட்களுக்குப் பதிலாக இனி 28 நாட்களுக்குள் வெளியிட உள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அடிப்படை ஆண்டைக் கருத்தில் கொண்டு ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் தொழில்துறை உற்பத்தியின் நடவடிக்கைகளின் போக்குகளை இது அளவிடுகிறது.
இது முந்தைய ஆண்டை விட ஒரு குறிப்பிட்ட ஆண்டில் தொழில்துறைக் களங்களில் நேரடி உற்பத்தியின் ஒப்பீட்டு மாற்றத்தைக் குறிக்கிறது.
சமீபத்தியக் குறியீட்டின்படி, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 5.2% மற்றும் பிப்ரவரி மாதத்தில் 5.6% ஆக இருந்த IIP வளர்ச்சியிலிருந்து திடீர் சரிவைக் கண்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் 5.8% ஆக இருந்த உற்பத்தி வளர்ச்சியானது பிப்ரவரி மாதத்தில் 2.9% ஆக பாதியாகக் குறைந்தது.
ஒட்டுமொத்தத் தொழில்துறை செயல்பாட்டு வளர்ச்சியானது, 2024-25 ஆம் ஆண்டில் (பிப்ரவரி மாதம் வரையில்) 4.1% ஆக இருந்தது என்பதோடு இது 2023-24 ஆம் ஆண்டின் அதே காலக் கட்டத்தில் 6 சதவீதத்தினை விடக் குறைவாக இருந்தது.
மூன்று முக்கியத் துறைகளில், மின்சாரத் துறையின் வளர்ச்சியில் மட்டுமே அதிகரிப்பு பதிவானது. ஜனவரி மாதத்தில் 2.4% ஆக இருந்த இது பிப்ரவரி மாதத்தில் 3.6% ஆக உயர்ந்தது.