பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் தரவுச் செயலாக்க முறைகளை மாற்றியமைக்கக் கூடிய ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர்.
வழக்கமான சிலிக்கான் அடிப்படையிலான தொழில்நுட்பத்திற்குப் பதிலாக உலோக-கரிமப் படலத்தைப் பயன்படுத்தி மெம்ரிஸ்டர் எனப்படும் ஒரு வகை குறைக்கடத்தி சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த படலம் ஆனது உடலில் உள்ள மூளை நியூரான்கள் மற்றும் நரம்பிணைப்பு வலை அமைப்புகளைப் பயன்படுத்தி தகவலைச் செயலாக்கும் விதத்தைப் பெருமளவில் பிரதிபலிப்பதற்காக மெமரிஸ்டருக்கு உதவுகிறது.
மெமரிஸ்டர், ஒரு வழக்கமான எண்ணிமக் கணினியுடன் ஒருங்கிணைக்கப்படும் போது, அதன் ஆற்றல் மற்றும் வேகச் செயல்திறனை நூற்றுக்கணக்கான மடங்கு அதிகரிக்கிறது.
நியூரோமார்பிக் கம்ப்யூட்டிங் (நரம்பியல் மண்டல அமைப்பினை ஒத்த) என்பது மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தக் கணினிகள் வடிவமைக்கப்பட்டு, அதன் மாதிரியில் உருவாக்கப்படும் ஒரு துறை ஆகும்.