இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் (IISc) ஆராய்ச்சியாளர்கள் தண்ணீரில் உள்ள கன உலோக மாசுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக நுண் பொருள் அடிப்படையிலான தீர்வை உருவாக்கியுள்ளனர்.
குரோமியம் கலந்த நிலத்தடி நீரைச் சுத்தம் செய்ய உதவும் ஒரு புதுமையான நுண் பொருளை இக்குழு உருவாக்கியுள்ளது.
இது நிலைப்படுத்தப்பட்ட நுண்ணிய அளவிலான சுழிய பிணைப்பு கொண்ட இரும்பு 'சல்பைடு அயனியேற்றப்பட்ட' கார்பாக்சிமெத்தில் செல்லுலோஸ் (S-CMC-nZVI) எனப் படுகிறது.
நீரிலிருந்து நச்சுத் தன்மை கொண்ட ஒரு உலோக வடிவமான அறுபிணைப்பு கொண்ட குரோமியத்தினை அகற்றுவதில் இது குறிப்பிடத்தக்க செயல்திறனை வழங்கியுள்ளது.