TNPSC Thervupettagam

IISc - நியூரோமார்பிக் கம்ப்யூட்டிங்

October 1 , 2024 2 days 64 0
  • பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அறிவியலாளர்கள் தரவுச் செயலாக்க முறைகளை மாற்றியமைக்கக் கூடிய ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர்.
  • வழக்கமான சிலிக்கான் அடிப்படையிலான தொழில்நுட்பத்திற்குப் பதிலாக உலோக-கரிமப் படலத்தைப் பயன்படுத்தி மெம்ரிஸ்டர் எனப்படும் ஒரு வகை குறைக்கடத்தி சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
  • இந்த படலம் ஆனது உடலில் உள்ள மூளை நியூரான்கள் மற்றும் நரம்பிணைப்பு வலை அமைப்புகளைப் பயன்படுத்தி தகவலைச் செயலாக்கும் விதத்தைப் பெருமளவில் பிரதிபலிப்பதற்காக மெமரிஸ்டருக்கு உதவுகிறது.
  • மெமரிஸ்டர், ஒரு வழக்கமான எண்ணிமக் கணினியுடன் ஒருங்கிணைக்கப்படும் போது, ​​அதன் ஆற்றல் மற்றும் வேகச் செயல்திறனை நூற்றுக்கணக்கான மடங்கு அதிகரிக்கிறது.
  • நியூரோமார்பிக் கம்ப்யூட்டிங் (நரம்பியல் மண்டல அமைப்பினை ஒத்த) என்பது மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் இந்தக் கணினிகள் வடிவமைக்கப்பட்டு, அதன் மாதிரியில் உருவாக்கப்படும் ஒரு துறை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்