புனேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது, சிறப்பு படிகங்களை உருவாக்குவதற்காக புதிய வழியைக் கண்டறிந்துள்ளது.
கூட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, அதன் குழுவானது CsPbBr3 நுண் தட்டுகள் எனப் படும் சில சிறப்புப் படிகங்களை உருவாக்குவதற்கான புதிய வழியைப் பதிவு செய்து உள்ளன.
இந்தப் படிகங்களின் மிக உயரியப் பண்புகள் ஆனது, ஒளியுணர் கருவிகள் மற்றும் மின்னணுச் சாதனங்களில் பயன்படுத்துவதற்கு என்று நம்பிக்கைக்குரிய அம்சமாக விளங்குகின்றன.
CsPbBr3 என்பது திறம் மிக்க ஒளி மின்னணுவியல் பண்புகளைக் கொண்ட ஒரு வகை பொருளாகும்.
சூரிய சக்தி மின்கலங்கள், LED மற்றும் உணர்விகள் போன்ற சாதனங்களுக்கு மிகவும் பயனுள்ள வழிகளில் இது ஒளியுடன் தொடர்பு கொள்ள முடியும்.