கோழிக்கோட்டில் அமைந்துள்ள இந்திய மசாலாப் பொருட்கள் ஆராய்ச்சி மையமானது (IISR), அதிக மகசூல் தரும் புதிய வகை கருப்பு மிளகு ரகம் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
இந்த ரகத்திற்கு ‘IISR சந்திரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்தக் கலப்பின ரகத்தை உருவாக்குவதற்காக சோழமுண்டி மற்றும் தொம்மன் கொடி ஆகிய இரண்டு மிளகு ரகங்கள் மரபணு கலப்பு செய்யப்பட்டது.
தோற்று வழி ரகத்தின் பண்புகள் அனைத்தையும் தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்வதற்காக அது மீண்டும் தொம்மன் கொடி ரகத்துடன் கலப்பு செய்யப்பட்டது.