இந்திய வேளான ஆராய்ச்சி சபையின் இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனம் (IISR) ஆனது மசாலா/நறுமணப் பொருட்கள் தொழில் துறைக்காக ஒரு புதிய வெளிர் நிற மஞ்சள் வகையை உருவாக்கியுள்ளது.
IISR சூர்யா எனப் பெயரிடப்பட்ட இந்தப் புதிய வகை மஞ்சள் ஆனது, பொடிகள் தயாரிக்கும் தொழில் துறைக்கான வெளிர் நிற வேர்த் தண்டுக் கிழங்கைக் கொண்டு உள்ளது.
தற்போதுள்ள வெளிர் நிற வகைகளுடன் (மைடுகூர்) ஒப்பிடும் போது 20-30 சதவீதம் அதிக மகசூலை வழங்குகின்ற இது அதிக மகசூல் தரும் நீண்ட காலப் பயிர் வகை (9 மாதங்கள்) ஆகும்.
கேரளா, தெலுங்கானா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்திலும் சாகுபடி செய்வதற்கு IISR சூர்யா பரிந்துரைக்கப்பட்டுள்ளது.