சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகமானது, 'பசுமை ஹைட்ரஜன்' உற்பத்தியின் சோதனை/சரிபார்ப்புத் தரநிலைகளை உருவாக்குகின்ற மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தொழில்துறைகளுடன் இணைந்து பணியாற்ற உள்ளது.
இது 'தமிழகத்தில் அமைந்த ஹைட்ரஜன் பள்ளத்தாக்குப் புத்தாக்க தொகுதி' (HVIC-TN) என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும்.
இது ஹைட்ரஜன் துறையில் பணியாற்றும் சுமார் 30 நிறுவனங்களை உள்ளடக்கியது ஆகும்.
இதில் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் ஆராய்ச்சி பூங்கா மற்றும் தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் ஆகியவை அடங்கும்.
பசுமை ஹைட்ரஜன் என்பது மின்னாற்பகுப்பு அல்லது உயிரிப் பொருட்களின் மாற்றம் மூலமாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்பட்ட ஹைட்ரஜன் ஆகும்.