ILO அமைப்பின் 4வது உலகளாவியப் புலம்பெயர்ந்தோர் மதிப்பீடுகள்
December 26 , 2024 27 days 100 0
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) சமீபத்தியப் புலம்பெயர்ந்தோர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேசப் புலம்பெயர்ந்தோர், உலகத் தொழிலாளர் சந்தையில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்பதோடு இது 2022 ஆம் ஆண்டில் பதிவான தொழிலாளர் வளத்தில் 4.7 சதவீதமாக உள்ளது.
2022 ஆம் ஆண்டில் 167.7 மில்லியன் புலம்பெயர்ந்தோர் தங்கள் இலக்கு நாடுகளின் தொழிலாளர் வளத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.
இவர்களில் சுமார் 102.7 மில்லியன் ஆண்கள் மற்றும் 64.9 மில்லியன் பெண்கள் ஆவர்.
இது 2013 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமான அதிகரிப்பைக் குறிப்பதோடு இது முக்கியமாக 2013-2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பதிவானது.
தொழிலாளர் வளத்தில் உள்ள பெரும்பான்மையான புலம்பெயர்ந்தோர் மிகவும் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் குவிந்துள்ளனர்.
இது மொத்தத்தில் 68.4 சதவிகிதம்(114.7 மில்லியன் மக்கள்) ஆகும், அதைத் தொடர்ந்து 17.4 சதவிகிதம் பேர் (29.2 மில்லியன்) மேல்மட்ட நடுத்தர வருமானம் கொண்ட சில நாடுகளில் உள்ளனர்.
2022 ஆம் ஆண்டு தொழிலாளர் வளத்தில் பங்குபெற்ற சுமார் 167.7 மில்லியன் புலம் பெயர்ந்தவர்களில், 155.6 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர், அதே நேரத்தில் 12.1 மில்லியன் பேர் வேலைவாய்ப்பில்லாமல் இருந்தனர்.
புலம்பெயர்ந்தோர் (சுமார் 7.2 சதவீதம்), புலம் பெயராதவர்களுடன் (சுமார் 5.2 சதவீதம்) ஒப்பிடப் படும் போது அதிக வேலைவாய்ப்பின்மை விகிதத்தை எதிர்கொண்டனர்.
புலம்பெயர்ந்தப் பெண்கள் (சுமார் 8.7 சதவீதம்) ஆண்களை விட (சுமார் 6.2 சதவீதம்) அதிக வேலைவாய்ப்பின்மை நிலைகளை எதிர்கொள்கின்றனர்.