TNPSC Thervupettagam

ILO அமைப்பின் 4வது உலகளாவியப் புலம்பெயர்ந்தோர் மதிப்பீடுகள்

December 26 , 2024 27 days 99 0
  • சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ILO) சமீபத்தியப் புலம்பெயர்ந்தோர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • சர்வதேசப் புலம்பெயர்ந்தோர், உலகத் தொழிலாளர் சந்தையில் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கின்றனர் என்பதோடு இது 2022 ஆம் ஆண்டில் பதிவான தொழிலாளர் வளத்தில் 4.7 சதவீதமாக உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் 167.7 மில்லியன் புலம்பெயர்ந்தோர் தங்கள் இலக்கு நாடுகளின் தொழிலாளர் வளத்தின் ஒரு பகுதியாக இருந்தனர்.
  • இவர்களில் சுமார் 102.7 மில்லியன் ஆண்கள் மற்றும் 64.9 மில்லியன் பெண்கள் ஆவர்.
  • இது 2013 ஆம் ஆண்டிலிருந்து சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமான அதிகரிப்பைக் குறிப்பதோடு இது முக்கியமாக 2013-2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பதிவானது.
  • தொழிலாளர் வளத்தில் உள்ள பெரும்பான்மையான புலம்பெயர்ந்தோர் மிகவும் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் குவிந்துள்ளனர்.
  • இது மொத்தத்தில் 68.4 சதவிகிதம்(114.7 மில்லியன் மக்கள்) ஆகும், அதைத் தொடர்ந்து 17.4 சதவிகிதம் பேர் (29.2 மில்லியன்) மேல்மட்ட நடுத்தர வருமானம் கொண்ட சில நாடுகளில் உள்ளனர்.
  • 2022 ஆம் ஆண்டு தொழிலாளர் வளத்தில் பங்குபெற்ற சுமார் 167.7 மில்லியன் புலம் பெயர்ந்தவர்களில், 155.6 மில்லியன் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர், அதே நேரத்தில் 12.1 மில்லியன் பேர் வேலைவாய்ப்பில்லாமல் இருந்தனர்.
  • புலம்பெயர்ந்தோர் (சுமார் 7.2 சதவீதம்), புலம் பெயராதவர்களுடன் (சுமார் 5.2 சதவீதம்) ஒப்பிடப் படும் போது அதிக வேலைவாய்ப்பின்மை விகிதத்தை எதிர்கொண்டனர்.
  • புலம்பெயர்ந்தப் பெண்கள் (சுமார் 8.7 சதவீதம்) ஆண்களை விட (சுமார் 6.2 சதவீதம்) அதிக வேலைவாய்ப்பின்மை நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்