இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) தொலைநோக்குத் திட்டம்-2047 ஆவணம் பிரதமரால் வெளியிடப்பட்டுள்ளது.
2047 ஆம் ஆண்டிற்குள் கிராமம் மற்றும் வீடுகளில் அனைத்து வகையான மிகவும் கடுமையான வானிலையையும் மிகவும் முழுமையான சதவீத அளவில் கண்டறிந்து, அத்தகைய நிகழ்வுகளினால் ஏற்படும் உயிர் இழப்பு எண்ணிக்கையினை சுழியாகக் குறைப்பதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
வானிலைத் துறையானது, மூன்று நாட்கள் வரையில் முழுமையான துல்லியத்துடனும், ஐந்து நாட்கள் வரையில் 90 சதவீதத் துல்லியத்துடனும், ஏழு நாட்கள் வரையில் 80 சதவீதத் துல்லியத்துடனும், 10 நாட்கள் வரையில் 70 சதவீதத் துல்லியத்துடனுமான முன்னறிவிப்பை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இது தொகுதி மற்றும் பஞ்சாயத்து நிலைகளில் அனைத்து கடுமையான வானிலை நிகழ்வுகள் குறித்த முன்னறிவிப்பு இலக்குகளையும் உள்ளடக்கியுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்படும் பல முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, அடுத்த இரண்டு ஆண்டுகள், அடுத்த 10 ஆண்டுகள் (2035 ஆம் ஆண்டிற்குள்) மற்றும் அடுத்த 22 ஆண்டுகள் (2047 ஆம் ஆண்டிற்குள்) ஆகிய பல ஆண்டுகளுக்கான இலக்குகளையும் இது குறிப்பிட்டுக் காட்டுகிறது.
பிரதமர் அவர்கள் 150 நினைவு ரூபாய் நாணயத்தினையும் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தபால் முத்திரையையும் வெளியிட்டார்.
2025 ஆம் ஆண்டு குடியரசுத் தின அணிவகுப்பில் IMD ஆனது முதன்முறையாக அதன் சொந்த அணிவகுப்பு காட்சி வாகனத்தினைக் காட்சிப்படுத்த உள்ளது.