சர்வதேச மேலாண்மை மேம்பாட்டுக் கல்வி நிறுவனம் (IMD) ஆனது சமீபத்திய உலகப் போட்டித் தன்மை தரவரிசையினை வெளியிட்டுள்ளது.
டென்மார்க், அயர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இதில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
37வது இடத்தில் இருந்த இந்தியா இதில் 3 இடங்கள் சரிந்து 40வது இடத்தைப் பெற்று உள்ளது.
இந்தியா 2019-2021 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தொடர்ச்சியாக 43வது இடத்தில் இருந்தது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடச் செய்யும் போது, இந்தியாவின் அரசாங்கச் செயல்திறனில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டாலும், வணிகச் செயல்திறன், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரச் செயல்திறன் ஆகியவற்றில் சிறிதளவு பின்னடைவில் உள்ளது என்று IMD அறிக்கை எடுத்துக் காட்டியுள்ளது.