TNPSC Thervupettagam

IMDயின் போட்டித் திறன் தர வரிசை

May 28 , 2018 2247 days 629 0
  • மேலாண்மை மேம்பாட்டிற்கான சர்வதேச நிறுவனத்தினால் (International Institute for Management Development - IMD) வெளியிடப்படும் தொகுக்கப்பட்ட வருடாந்திர போட்டித்திறன் தரவரிசையில் இந்தியா ஒரு படி முன்னேறி 44-வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா இத்தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
  • அமெரிக்கா, பொருளாதார செயல்பாடு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றில் சிறப்பான நிலையைக் கொண்டிருப்பதால் உலகளவில் மிகவும் போட்டிக்குரிய பொருளாதார நாடாக விளங்குகின்றது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங் (2), சிங்கப்பூர் (3), நெதர்லாந்து (4) மற்றும் சுவிட்சர்லாந்து (5) ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • முதல் பத்து இடங்களில் இடம் பெற்ற மற்ற நாடுகளாவன: டென்மார்க் (6), ஐக்கிய அரபு அமீரகம் (7), நார்வே (8), சுவீடன் (9), கனடா (10).
  • 14 ஆசிய நாடுகளுக்கான இத்தரவரிசைப்பட்டியலில், இந்தியா, 12-வது மிகவும் போட்டிக்குரிய பொருளாதார நாடாக உள்ளது.
  • இதற்கிடையில் சீனா (13) கடந்த பத்தாண்டுகளில் இத்தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பத்து இடங்கள் முன்னேறியுள்ளது.
  • சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள IMD வணிகப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவான IMD உலகப் போட்டித்திறன் மையம், இத்தரவரிசையை 1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது.
  • இந்த ஆண்டு 63 நாடுகள் இத்தரவரிசையில் இடம் பெற்றுள்ளன. சிப்ரஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இத்தரவரிசையில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்