மேலாண்மை மேம்பாட்டிற்கான சர்வதேச நிறுவனத்தினால் (International Institute for Management Development - IMD) வெளியிடப்படும் தொகுக்கப்பட்ட வருடாந்திர போட்டித்திறன் தரவரிசையில் இந்தியா ஒரு படி முன்னேறி 44-வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா இத்தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்கா, பொருளாதார செயல்பாடு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றில் சிறப்பான நிலையைக் கொண்டிருப்பதால் உலகளவில் மிகவும் போட்டிக்குரிய பொருளாதார நாடாக விளங்குகின்றது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங் (2), சிங்கப்பூர் (3), நெதர்லாந்து (4) மற்றும் சுவிட்சர்லாந்து (5) ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
முதல் பத்து இடங்களில் இடம் பெற்ற மற்ற நாடுகளாவன: டென்மார்க் (6), ஐக்கிய அரபு அமீரகம் (7), நார்வே (8), சுவீடன் (9), கனடா (10).
14 ஆசிய நாடுகளுக்கான இத்தரவரிசைப்பட்டியலில், இந்தியா, 12-வது மிகவும் போட்டிக்குரிய பொருளாதார நாடாக உள்ளது.
இதற்கிடையில் சீனா (13) கடந்த பத்தாண்டுகளில் இத்தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை பத்து இடங்கள் முன்னேறியுள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள IMD வணிகப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவான IMD உலகப் போட்டித்திறன் மையம், இத்தரவரிசையை 1989 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டு 63 நாடுகள் இத்தரவரிசையில் இடம் பெற்றுள்ளன. சிப்ரஸ் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இத்தரவரிசையில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளன.