சமீபத்தில் மத்திய நிதித்துறை மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் காணொலி மூலம் சர்வதேச நாணய மற்றும் நிதியியல் குழுவின் (IMFC - International Monetary and Financial Committee) ஒரு முழுமையான அமர்வில் கலந்து கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்ட விவாதங்களானது IMF மேலாண் இயக்குநரின் உலகளாவிய கொள்கைச் செயல்திட்டமான ”அபூர்வமான நேரம் – அபூர்வமான செயல்” என்ற ஒன்றை அடிப்படையாகக் கொண்டது.
இந்த குழுவானது உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகள் குறித்து விவாதித்தது. இது IMFன் பணி நடவடிக்கைகள் குறித்து, அந்த அமைப்பிற்கு ஆலோசனைகளை வழங்கியது.
IMFC ஆனது 187 ஆளுநர்களைக் கொண்ட குழுவிலிருந்துப் பெறப்பட்ட 24 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
எனவே, IMFC ஆனது நிதியத்தின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது.
IMFC ஆனது ஆண்டிற்கு இருமுறை அதாவது வசந்த காலம் மற்றும் வருடாந்திர சந்திப்புகள் ஆகியவற்றில் கூடி விவாதிக்கின்றது.
IMFC ஆனது எந்தவொரு முறையான வாக்கெடுப்பு அடிப்படையிலும் இல்லாமல், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் செயல்படுகின்றது.