TNPSC Thervupettagam
November 28 , 2017 2425 days 810 0
  • சர்வதேச பலதரப்பு கடல் ஆராய்ச்சி மற்றும் மீட்பு பயிற்சி – 2017 (The International Multilateral Maritime Search and Rescue Exercise 2017-IMMSAREX) ஆனது வங்கதேசத்தின் காக்ஸ் பஜார் பகுதியில் நடத்தப்பட்டது.
  • இந்தியப் பெருங்கடல் கடற்படை ஆய்வரங்கத்தினுடைய (IONS – Indian Ocean Naval Symposium) மேற்பார்வையின் கீழ் நடைபெறும் இந்த பயிற்சியை வங்கதேசப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • இந்திய கடற்படை கப்பல்களான INS ரன்வீர், INS சஹ்யாத்ரி, INS கரியால் மற்றும் INS சுகன்யா போன்றவற்றுடன் இணைந்து P-81 கடலோர ரோந்து விமானமும் இந்தப் பயிற்சியில் ஈடுபட்டது.
  • இந்தியாவின் சார்பாக இந்திய கடற்படை தளபதி சுனில் லம்பா இந்த பயிற்சியில் கலந்து கொண்டார்.
இந்திய பெருங்கடல் கடற்படை ஆய்வரங்கு – IONS
  • இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவுகின்ற கடற்சார் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு திறந்த மற்றும் உள்ளடக்க மன்றத்தை  உருவாக்கி இந்தியப் பெருங்கடலின் கரைகளில் அமைந்துள்ள நாடுகளின் (littoral states of the Indian Ocean Region IOR) கடற்படைகளுக்கிடையே கடற்சார்  ஒத்துழைப்பை அதிகரிக்க உருவாக்கப்பட்ட தன்னார்வத் தொடக்கமே இம்மன்றமாகும்.
  • இந்தியப் பெருங்கடல் கடற்படை ஆய்வரங்கானது 2008-ல் இந்திய கடற்படையால் உருவாக்கப்பட்டது.
  • தற்போது 23 உறுப்பு நாடுகளையும், பார்வையாளராக 9 நாடுகளையும் கொண்ட வலுவான அமைப்பாக உள்ளது.
  • IONS-ன் நடப்பு தலைவராக வங்கதேசம் உள்ளது. மேலும் வங்கதேசம் IONS சாசனத்தின் கீழ் IONS-ன் IMMSAREX எனும் இந்த முதல் செயல்பாட்டு பயிற்சியை நடத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்