TNPSC Thervupettagam

IMO 2020 - கப்பல்களுக்கான புதிய விதிகள்

February 4 , 2020 1664 days 609 0
  • சர்வதேச கடல்சார் அமைப்பானது (International Maritime Organization - IMO) IMO 2020” எனப்படும் புதிய விதிமுறைகளை முன்வைத்துள்ளது.
  • IMO 2020 விதிமுறையானது 0.5 சதவீதத்திற்கு மேல் கந்தகம் அல்லது சல்பரைக் கொண்ட எரிபொருட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்கின்றது. இதற்கு முன்பு சல்பரின் அளவானது 3.5 சதவீதமாக இருந்தது.
  • துப்புரவாக்கிகள் என அழைக்கப்படும் சல்பர் - துப்புரவு சாதனங்களுடன் பொருத்தப்பட்ட கப்பல்கள் மட்டுமே உயர் சல்பர் எரிபொருளைத் தொடர்ந்து எரிக்க அனுமதிக்கப் படுகின்றன.
  • கடல் வாயு எண்ணெய் (marine gas oil - MGO) மற்றும் மிகக் குறைந்த அளவு சல்பரைக் கொண்ட எரிபொருள் எண்ணெய் (very low-sulphur fuel oil - VLSFO) போன்ற தூய்மையான எரிபொருட்களைக் கப்பல்கள் தேர்வு செய்யலாம்.

IMO பற்றி

  • ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனமான IMO ஆனது சர்வதேசக் கப்பல் போக்குவரத்து மற்றும் கப்பல்களில் இருந்து வெளிப்படும் மாசுக்களைத் தடுக்கும் பணியை மேற்கொள்ளுகின்றது.
  • இது 1948 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது ஐக்கிய இராஜ்ஜியத்தில் உள்ள லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டுச் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்