நாட்டில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தை (Innovation) ஊக்குவிப்பதற்காக, தாக்கம் உண்டாக்கும் ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் திட்டத்தின் (IMPRINT- Impacting Research Innovation and Technology) இரண்டாவது கட்டத்திற்கு 1000 கோடி ரூபாயை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (Ministry of Human Resource Development) ஒதுக்கியுள்ளது.
Imprint II திட்டத்தின் கீழ் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத் துறை ஆகியவை இணைந்து (Department of Science and Technology-DST) நிதியம் ஒன்றை ஏற்படுத்தி வருகின்றன.
ஆர்வமுடைய பிற அமைச்சகங்கள் மற்றும் தொழிற்துறைகள் இத்திட்டத்தில் பங்கெடுக்கலாம். மத்திய அறிவியல் மற்றும் தொழிற்நுட்பத்துறை உடனான ஒருங்கிணைவோடு ஓர் தனி செயல்பாடுடைய அமைப்பாக (separate vertical) இத்திட்டம் செயல்படும்.
இம்பிரின்ட்-இந்தியா திட்டமானது (IMPRINT India Programme) இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institutes of Technology-IITs) மற்றும் இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science -IISc) ஆகியவற்றின் கூட்டுத் தொடக்கமாகும்.
நாட்டினோடு தொடர்புடைய 10 தொழிற்நுட்பக் களங்களில் (10 technology domains) காணப்படுகின்ற தொழில்நுட்ப மற்றும் முக்கிய பொறியியல் சவால்களை (engineering and technology challenges) தீர்ப்பதற்கு ஆராய்ச்சிகளுக்கான ஓர் திட்ட வரைபடத்தை (road map) உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.