TNPSC Thervupettagam

IMT நெடுஞ்சாலை

December 14 , 2017 2569 days 874 0
  • இந்தியா-மியான்மர்-தாய்லாந்து (India-Myanmar-Thailand - IMT) ஆகிய நாடுகளுக்கிடையேயான நெடுஞ்சாலை திட்டத்தை கம்போடியா மற்றும் லாவோஸ் PDR வழியே வியட்நாம் வரை விரிவுபடுத்துவதற்கு ஆசியான் நாடுகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டு வருகின்றது.
  • இந்தியா-மியான்மர்-தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையேயான முத்தரப்பு நெடுஞ்சாலை திட்டமான IMT Highway திட்டம் தற்போது கட்டமைக்கப்பட்டு வருகின்றது.
  • இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயற்கொள்கையின் (Act East Policy) கீழ் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் மோரே (Moreh)-விலிருந்து மியான்மர் வழியாக தாய்லாந்தின் மே சோட் (Mae Sot) வரை நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகின்றது. இதனோடு மேலும் இந்தியாவையும் கிழக்காசிய பகுதிகளையும் இணைக்க IMT மோட்டார் வாகன ஒப்பந்தம் (IMT Motor Vehicle Agreement – IMT MVA) ஒன்றையும் கொண்டு வர இந்தியா செயல்பட்டு வருகின்றது.
  • IMT முத்தரப்பு நெடுஞ்சாலையின் சாலை உள்கட்டமைப்புகளை பயன்படுத்துவதற்காக இந்தியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் IMT MVA-வினை இறுதி செய்யவும், செயல்படுத்தவும் 2014ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையை துவங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
  • தெற்காசியாவின் பிற பகுதிகளுடனும் இந்தியாவிற்கும் இந்தோ- ஆசிய தடையற்ற வர்த்தக பகுதிகளுக்கும் இடையே வணிகம் மற்றும் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காகவும்  இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகின்றது.
  • இத்திட்டத்தை மியான்மரில் அமலாக்குவதில் இந்தியா பெரும் கடினங்களை சந்தித்து வருகின்றது. இதனால் 2015-ல் கட்டிமுடிக்க இலக்கிடப்பட்ட இத்திட்டமானது இன்னும் நிறைவடையாமல் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்