TNPSC Thervupettagam
March 15 , 2023 494 days 261 0
  • INS திரிகண்ட் என்ற கப்பலானது வளைகுடாப் பகுதியில் நடத்தப் படுகின்ற சர்வதேச கடல்சார் பயிற்சி/ கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2023 (IMX/CE-23) என்ற பயிற்சியில் பங்கேற்கச் செய்றது.
  • இது அமெரிக்கா தலைமையிலான 34 நாடுகளைக் கொண்ட கடற்படைக் குழுவான, ஒருங்கிணைந்த கடல்சார் படைகளால் (CMF) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 50க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச கடல்சார் முகமைகளின் பங்கேற்புடன் சேர்ந்து திரிகண்ட் கப்பலும் இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளது.
  • IMX/CE-23 என்பது உலகின் மிகப்பெரியப் பன்னாட்டுக் கடல்சார் பயிற்சிகளில் ஒன்று ஆகும்.
  • சர்வதேசக் கடல்சார் பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்கேற்பது இது முதல் முறை என்றாலும், ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் பயிற்சியில் இந்தியக் கடற்படைக் கப்பல் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும்.
  • முன்னதாக, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஒருங்கிணைந்தக் கடல்சார் படைகளினால் நடத்தப்பட்ட சீ ஸ்வார்டு 2 என்ற நடவடிக்கையில் INS  திரிகண்ட் என்ற கப்பல் பங்கேற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்