INS திரிகண்ட் என்ற கப்பலானது வளைகுடாப் பகுதியில் நடத்தப் படுகின்ற சர்வதேச கடல்சார் பயிற்சி/ கட்லாஸ் எக்ஸ்பிரஸ் 2023 (IMX/CE-23) என்ற பயிற்சியில் பங்கேற்கச் செய்றது.
இது அமெரிக்கா தலைமையிலான 34 நாடுகளைக் கொண்ட கடற்படைக் குழுவான, ஒருங்கிணைந்த கடல்சார் படைகளால் (CMF) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
50க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச கடல்சார் முகமைகளின் பங்கேற்புடன் சேர்ந்து திரிகண்ட் கப்பலும் இப்பயிற்சியில் பங்கேற்க உள்ளது.
IMX/CE-23 என்பது உலகின் மிகப்பெரியப் பன்னாட்டுக் கடல்சார் பயிற்சிகளில் ஒன்று ஆகும்.
சர்வதேசக் கடல்சார் பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்கேற்பது இது முதல் முறை என்றாலும், ஒருங்கிணைந்த கடல்சார் படைகளின் பயிற்சியில் இந்தியக் கடற்படைக் கப்பல் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஒருங்கிணைந்தக் கடல்சார் படைகளினால் நடத்தப்பட்ட சீ ஸ்வார்டு 2 என்ற நடவடிக்கையில் INS திரிகண்ட் என்ற கப்பல் பங்கேற்றது.