இந்தியத் தேசிய இணையப் பரிவர்த்தனை நிறுவனமானது விருப்பமுள்ள 22 உத்தியோகப்பூர்வ இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இலவச சர்வதேச மயப் படுத்தப்பட்ட வரம்பு எல்லையின் பெயரை (Internationalized Domain Name) வழங்குவதாக அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்த ஒவ்வொருவரின் IN வரம்பு எல்லைக்கும் இது கிடைக்கும்.
சர்வதேச மயப்படுத்தப் பட்ட வரம்பு எல்லையின் பெயரை ஏற்றுக் கொள்ளச் செய்வதையும் உள்ளூர் மொழி உள்ளடக்கத்தின் பெருக்கத்தையும் தூண்டுவதற்காக இந்தச் சலுகை உருவாக்கப் பட்டது.
இந்தியாவின் தேசிய இணையப் பரிமாற்ற நிறுவனம் என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
இது 2003 ஆம் ஆண்டு முதல் இந்தியக் குடிமக்களுக்கு இணையத் தொழில்நுட்பத்தைப் பரப்புவதற்காக வேண்டி செயல்படுகிறது.