TNPSC Thervupettagam
September 27 , 2017 2616 days 901 0
  • ஐ.என்.எஸ் தராஸா எனும் அதிவிரைவுத் தாக்குதல் (Water Jet Fast Attack Craft) கப்பல் மும்பையிலுள்ள அரசு கப்பல் கட்டும் தளமான மஸாகான் கப்பற்கட்டும் தளத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • அதிவிரைவுத் தாக்குதல் வகுப்பு கப்பல்களின் வரிசையில் (Water Jet FAC's) ஐ.என்.எஸ் தராஸா நான்காவது மற்றும் கடைசி கப்பலாகும்.
  • இதற்கு முந்தைய மூன்று கப்பல்களாவன
    • INS தர்முகி,
    • INS தியாகு
    • INS திலான்சங்
  • இந்தக் கப்பல் இந்திய கடற்படையிடம் உள்ள மேம்படுத்தப்பட்ட கார் நிகோபர் வகுப்பு அதிவிரைவுத் தாக்குதல் கப்பல் வகையிலானது.
  • இது கடல் மற்றும் கடற்கரை கண்காணிப்பு, பொருளாதார தனியுரிமை பகுதிகள் ரோந்து (EEZ Patrol), மற்றும் கடற் சட்ட அமலாக்கங்களுக்கும் பயன்படும்.
  • மேலும் தேடுதல் மற்றும் மீட்பு, பேரிடர் மீட்பு, மற்றும் மனிதாபிமான உதவிகள் போன்ற இராணுவம் அல்லாத நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும்.
  • வங்கக்கடலில் உள்ள அந்தமான் மற்றும் நிகோபார் தீவுக்கூட்டங்களின் அழகினை முழங்கும் வகையில் தராஸா என இக்கப்பலுக்குப் பெயரிடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்