ஐ.என்.எஸ் தராஸா எனும் அதிவிரைவுத் தாக்குதல் (Water Jet Fast Attack Craft) கப்பல் மும்பையிலுள்ள அரசு கப்பல் கட்டும் தளமான மஸாகான் கப்பற்கட்டும் தளத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
அதிவிரைவுத் தாக்குதல் வகுப்பு கப்பல்களின் வரிசையில் (Water Jet FAC's) ஐ.என்.எஸ் தராஸா நான்காவது மற்றும் கடைசி கப்பலாகும்.
இதற்கு முந்தைய மூன்று கப்பல்களாவன
INS தர்முகி,
INS தியாகு
INS திலான்சங்
இந்தக் கப்பல் இந்திய கடற்படையிடம் உள்ள மேம்படுத்தப்பட்ட கார் நிகோபர் வகுப்பு அதிவிரைவுத் தாக்குதல் கப்பல் வகையிலானது.
இது கடல் மற்றும் கடற்கரை கண்காணிப்பு, பொருளாதார தனியுரிமை பகுதிகள் ரோந்து (EEZ Patrol), மற்றும் கடற் சட்ட அமலாக்கங்களுக்கும் பயன்படும்.
மேலும் தேடுதல் மற்றும் மீட்பு, பேரிடர் மீட்பு, மற்றும் மனிதாபிமான உதவிகள் போன்ற இராணுவம் அல்லாத நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படும்.
வங்கக்கடலில் உள்ள அந்தமான் மற்றும் நிகோபார் தீவுக்கூட்டங்களின் அழகினை முழங்கும் வகையில் தராஸா என இக்கப்பலுக்குப் பெயரிடப்பட்டு உள்ளது.