இந்தியத் தேசியக் கடல் சார் தகவல் சேவை மையம் (INCOIS) ஆனது 1999 ஆம் ஆண்டில் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நிறுவப்பட்டது.
இது புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் (MoES) கீழ் செயல்படும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
இது இந்தியா மற்றும் 28 இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு, 10 நிமிடங்களுக்குள் சுனாமி எச்சரிக்கைகளை வழங்கச் செய்கின்ற இந்திய சுனாமி முன் எச்சரிக்கை மையத்தினை (ITEWC) நிறுவியது.
இது யுனெஸ்கோ அமைப்பினால் சிறந்த சுனாமி முன்னெச்சரிக்கை சேவை வழங்கும் அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடலில் தொலைந்து போன தனிநபர்கள் அல்லது பொருட்களைக் கண்டுபிடிப்பதில் உதவுவதற்காக INCOIS நிறுவனமானது தேடல் மற்றும் மீட்பு உதவிக் கருவியை (SARAT) உருவாக்கியுள்ளது.
இந்தத் தின நிகழ்வின் போது INCOIS மையமானது, ஹில்சா மீன்வள ஆலோசனை (HiFA) வழங்கீட்டு சேவைகள் மற்றும் INCOIS உலகளாவியப் பெருங்கடல் மறு பகுப்பாய்வு (IGORA) பதிப்பு 1 ஆகிய இரண்டு புதியத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.