TNPSC Thervupettagam

Ind-As (இந்திய கணக்கு தரமதிப்பளவுகள்) ஏற்றுக்கொள்ளுதல் தள்ளி வைப்பு

April 11 , 2018 2275 days 742 0
  • இந்திய ரிசர்வ் வங்கி இந்திய கணக்குத் தர மதிப்பு அளவுகள் வணிக வங்கிகளால் ஏற்றுக் கொள்வதை 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஒத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணம் அந்த வங்கிகள் புதிய கணக்கு முறையை ஏற்றுக் கொள்வதற்குத் தயாராகவில்லை என்பதே ஆகும்.
  • நிதி கணக்குகளின் மாதிரி வடிவத்தை ஏற்றுக் கொள்வதற்கு வேண்டி ரிசர்வ் வங்கி, வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம் - 1949ல் திருத்தம் ஒன்றை மேற்கொள்ள இந்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளது. இந்த சட்டத்தின் 3வது பட்டியல் இந்திய கணக்கு தர மதிப்பு அளவுகளின் படி நிதி அறிக்கைகளை தாக்குதல் செய்வதற்கு ஏதுவானதாக இல்லை.
  • Ind-As என்பது கடன் அளிப்பவர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய உலகளாவிய கணக்கியல் முறையாகும்.
  • Ind-As என்பது சர்வதேச நிதியியல் அறிக்கை தரமதிப்பளவு 9 (International Financial Reporting Standard - IFRS) என்பதற்குச் சமமான ஒன்றாகும்.
  • வங்கிகளும், வங்கி சாராத நிதி நிறுவனங்களும் தற்சமயம் பொதுவாக ஏற்றுக் கொண்ட கணக்கியல் விதி முறைகளை (Generally Accepted Accounting Principles - GAAP) பின்பற்றி வருகின்றன.
  • பெருநிறுவனங்கள் ஏப்ரல் 1, 2016 முதல் Ind-As முறைக்கு உடன்பட்டு இயங்கி வருகின்றன.
  • 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 1, 2018 முதல் அனைத்து ஊரக வட்டார வங்கிகள் தவிர்த்து மற்ற வணிக வங்கிகள் Ind-As முறையை ஏற்றுக் கொள்ளும்படி சுற்றறிக்கை ஒன்றை அளித்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்