தேசியச் சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமானது (National Environmental Engineering Research Institute - NEERI) அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மன்றத்துடன் (Council of Scientific and Industrial Research - CSIR) இணைந்து கடந்த 60 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட காற்றின் தர ஆய்வுகளை ஆவணப்படுத்தக் கூடிய இந்தியாவின் முதலாவது வலைக் களஞ்சியத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது IndAIR (இந்திய காற்றுத் தர ஆய்வுகள் ஊடாடும் களஞ்சியம்) என்று பெயரிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் காற்றுத் தர ஆராய்ச்சியை கிடைக்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
1905 ஆம் ஆண்டிலிருந்து இயற்றப்பட்ட நாட்டின் அனைத்து முக்கியமான சட்டங்களும் இதில் அடங்கும்.
CSIR-NEERI என்பது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட மற்றும் நிதியளிக்கப்படும் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.