TNPSC Thervupettagam

India BPO மேம்பாட்டுத் திட்டம்

June 20 , 2018 2224 days 654 0
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது (Ministry of Electronics & Information Technology-MeitY) தன்னுடைய India BPO மேம்பாட்டுத் திட்டத்தை (India BPO Promotion Scheme)  நடப்பில் உள்ள 48000 இடங்களை 1 லட்சம் இடங்களாக  மாற்றி விரிவுபடுத்திட திட்டமிட்டுள்ளது.
  • மேலும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது 5 லட்சம் மெய்நிகர் சேவையகங்களின் (virtual servers)  திறனோடு நாட்டின் ஐந்தாவது மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தேசிய தகவல் மையத்தை (National data centre-NDC) மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நிறுவ உள்ளது.
  • தேசிய தகவல் மையமானது அரசின் இணையதளங்கள், இணையச் சேவைகள் மற்றும் செயலிகளை நிர்வகிக்கும் மையமாகும். நடப்பில் இம்மையமானது நாட்டில் புனே, ஹைதராபாத், டெல்லி, புவனேஸ்வர் ஆகிய 4 இடங்களில் செயல்படுகின்றது.

  • India -BPO மேம்பாட்டுத் திட்டமானது நாட்டிலுள்ள BPO/IT – ITES செயல்பாட்டுத் துறைகளை ஊக்குவிப்பதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டது.
  • இத்திட்டம் 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. BPO நிறுவனங்களைத் தோற்றுவிப்பதை ஊக்குவிப்பதும், 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படியிலான Tier II மற்றும் Tier III நகரங்களுக்கு அவற்றின் விரிவுபடுத்துதலை ஊக்குவிப்பதும்   இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
  • மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற தன்னாட்சியுடைய அமைப்பான இந்திய மென்பொருள் பூங்கா அமைப்பு (Software Technology Parks of India-STPI) இத்திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்