மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது (Ministry of Electronics & Information Technology-MeitY) தன்னுடைய India BPO மேம்பாட்டுத் திட்டத்தை (India BPO Promotion Scheme) நடப்பில் உள்ள 48000 இடங்களை 1 லட்சம் இடங்களாக மாற்றி விரிவுபடுத்திட திட்டமிட்டுள்ளது.
மேலும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமானது 5 லட்சம் மெய்நிகர் சேவையகங்களின் (virtual servers) திறனோடு நாட்டின் ஐந்தாவது மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தேசிய தகவல் மையத்தை (National data centre-NDC) மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நிறுவ உள்ளது.
தேசிய தகவல் மையமானது அரசின் இணையதளங்கள், இணையச் சேவைகள் மற்றும் செயலிகளை நிர்வகிக்கும் மையமாகும். நடப்பில் இம்மையமானது நாட்டில் புனே, ஹைதராபாத், டெல்லி, புவனேஸ்வர் ஆகிய 4 இடங்களில் செயல்படுகின்றது.
India -BPO மேம்பாட்டுத் திட்டமானது நாட்டிலுள்ள BPO/IT – ITES செயல்பாட்டுத் துறைகளை ஊக்குவிப்பதற்காக டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்டது.
இத்திட்டம் 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. BPO நிறுவனங்களைத் தோற்றுவிப்பதை ஊக்குவிப்பதும், 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படியிலான Tier II மற்றும் Tier III நகரங்களுக்கு அவற்றின் விரிவுபடுத்துதலை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்ற தன்னாட்சியுடைய அமைப்பான இந்திய மென்பொருள் பூங்கா அமைப்பு (Software Technology Parks of India-STPI) இத்திட்டத்தைச் செயல்படுத்தும் அமைப்பாகும்.