மத்தியத் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஆனது, "India Skills Accelerator" என்ற முன்னெடுப்பினைத் தொடங்குவதற்கு உலகப் பொருளாதார மன்றத்துடன் கூட்டுறவினை மேற்கொண்டுள்ளது.
புதுமையான கருத்தாக்கங்களை வெளிக்கொணரச் செய்வதற்கான பல்வேறு துறை சார் முன்னெடுப்புகளைச் செயல்படுத்துவதற்கு வேண்டி இது ஒரு பொது-தனியார் ஒத்துழைப்பு தளமாக செயல்படும்.
மூன்று முக்கியமான நிலைகளில் மாற்றத்தை ஊக்குவிப்பதை இந்தத் திட்டமானது நோக்கமாகக் கொண்டுள்ளது, அவையாவன;
எதிர்காலத் திறன் சார் தேவைகளைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் மனநிலையை மாற்றுதல்
பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வை அதிகரித்தல்; மற்றும்
அதிக ஏற்பமைவு மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளத் தக்கத் திறன் சார் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு என்று நிறுவனக் கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு கொள்கை கட்டமைப்புகளை மேம்படுத்த உறுதியளித்தல்.