உலக வானிலை நாள் அனுசரிப்பின் ஒரு பகுதியாக, INDRA எனப்படுகின்ற மற்றும் உள்நாட்டிலேயே நன்கு உருவாக்கப்பட்ட ஒரு கைபேசிச் செயலியானது (வானிலை பகுப்பாய்விற்கான இந்தியக் கடற்படையின் மாறுநிலை வளம்) தொடங்கப்பட்டது.
இது வானிலை தொடர்பான தகவல்களைப் பரப்ப உதவுவதோடு, உகந்த மற்றும் விரைவான முடிவெடுக்கும் திறனை நன்கு மேம்படுத்தும் முன்னெச்சரிக்கைகளை வழங்கும்.
இந்தச் செயலியானது இந்தியக் கடற்படையின், கடற்படைப் பெருங்கடலியல் மற்றும் வானிலை இயக்குநரகத்துடன் நன்கு ஒன்றிணைந்து BISAG (பாஸ்கராச்சார்யா தேசிய விண்வெளிப் பயன்பாட்டு மற்றும் புவி சார் தகவலளிப்பு நிறுவனம்) நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது.