TNPSC Thervupettagam
March 18 , 2024 123 days 221 0
  • FAO மற்றும் ICAR ஆகிய அமைப்புகள் இணைந்து, 2019-22 ஆம் ஆண்டிற்கான இந்திய மீன்வளம் மற்றும் விலங்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வலையமைப்பின் (INFAAR) கண்காணிப்புத் தரவை வெளியிட்டுள்ளன.
  • இந்தியாவில் வெளியிடப்படும் மீன்வளம் மற்றும் கால்நடைத் துறையில் நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) பற்றிய கண்காணிப்புப் போக்குகள் குறித்த முதல் அறிக்கை இது ஆகும்.
  • உணவிற்காகப் பயன்படுத்தப்படும் விலங்குகளின் உற்பத்தியில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு நுண்ணுயிர் எதிர்ப்புத் திறனுக்கு ஓர் இயக்கி ஆக அறியப் படுகிறது.
  • இ. கோலை ஐசோலேட்டுகளில், செஃபோடாக்சிம் (46 சதவீதம்) மற்றும் ஆம்பிசிலின் (41 சதவீதம்) ஆகியவற்றிற்கு எதிராக குறிப்பிடத் தக்க எதிர்ப்புத் திறன் உள்ளது.
  • S ஆரியஸ் மற்றும் CONS ஐசோலேட்டுகளில், பென்சிலினுக்கு எதிரான எதிர்ப்புத் திறன் சுமார் 75 சதவீதம் உள்ளது.
  • கூடுதலாக, மொத்த S.ஆரியஸ் ஐசோலேட்டுகளில் (452) சுமார் 41 ஐசோலேட்டுகள் மெதிசிலின் எதிர்ப்பு கொண்ட S.ஆரியஸ் (MRSA) எனக் கண்டறியப்பட்டது என்ற நிலையில் இது ஸ்டேஃபைலோகாகஸின் ஒருவகை மருந்து-எதிர்ப்பு மாறுபாடு ஆகும்.
  • மற்ற அனைத்து உணவுப் பயன்பாட்டு விலங்குகளுடன் ஒப்பிடுகையில், கோழி இறைச்சியில் இருந்து பெறப்பட்ட ஐசோலேட்டுகளான இ.கோலை மற்றும் ஸ்டேஃபை -லோகாகி ஆகிய இரண்டு நுண்ணுயிர்களுக்கு எதிராக சோதனை செய்யப் பட்ட அனைத்து நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் அதிக எதிர்ப்புத் திறன் விகிதங்களை நன்கு வெளிப்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்