நாசா நிறுவனமானது, ஒருங்கிணைந்த கள புற ஊதா நிறமாலைப் பரிசோதனை (INFUSE) திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது, பூமியிலிருந்து சுமார் 2,600 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள சிக்னஸ் லூப் எனப்படும் மீவுளிர் வீண்முகிலின் (சூப்பர்நோவா) எஞ்சிய பகுதியினை ஆய்வு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வீண்முகிலின் வெடிப்பானது 20,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக நாசா கருதுகிறது.
அந்த நிகழ்வு நிகழ்ந்தது முதல், பருப்பொருள் ஆனது மணிக்கு 930,000 மைல்கள் (1.5 மில்லியன் கிலோமீட்டர்கள்) வேகத்தில் வெளியேறியது.
இது பூமியிலிருந்து நிலவினை நோக்கிய தொலைவினை சில நிமிடங்களில் பயணிக்க போதுமான வேக விகிதம் ஆகும்.
2012 ஆம் ஆண்டில் ஒரு முழு நிலவின் அளவை விட மூன்று மடங்கு பெரிய பரப்பில் பரவிய இது மேலும், தற்போது இது 120 ஒளி ஆண்டுகள் தொலைவு வரையில் பரவி இருப்பதாக கருதப் படுகிறது.