INIOCOS-23 பயிற்சி எனப்படும் பன்னாட்டு விமானப் படைப் பயிற்சியினை ஹெலனிக் விமானப் படை (கிரீஸ் நாடு) நடத்தியது.
இந்திய விமானப்படை நான்கு Su-30 MKI மற்றும் இரண்டு C-17 விமானங்களுடன் இந்தப் பயிற்சியில் பங்கேற்றது.
இப்பயிற்சியில் பங்கேற்கும் விமானப் படைகளுக்கு இடையே சர்வதேச ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் இயங்குநிலைமையை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.