இந்திய அரசானது உத்திசார் எதிர்ப்பிற்காக, அணு ஆயுத ஏவுகணைகளுடன் கூடிய அணுசக்தியில் இயங்கும் தனது இரண்டாவது நீர்மூழ்கிக் கப்பலைக் கடற்படையில் இணைக்க உள்ளது.
6,000 டன் எடை கொண்ட INS அரிகாட் கப்பலானது, விசாகப் பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் (SBC) கட்டமைக்கப் பட்டது.
SSBN (அணு ஆயுதம் கொண்ட உந்துவிசை ஏவுகணைகளைக் கொண்ட அணுசக்தியால் இயக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான கடற்படை சொற்கூறு) மிகவும் விரைவில் இயக்கப் படும்.
அந்தக் கப்பல் ஆனது 2018 ஆம் ஆண்டில் முழுமையாக செயல்பட தொடங்கிய அதன் இணைக் கப்பலான INS அரிஹந்துடன் இணைந்து செயல்பட உள்ளது.
அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக டீசல் எரிபொருளில் இயங்கும் 18 மின்சார நீர்மூழ்கிக் கப்பல்கள், நான்கு SSBN மற்றும் ஆறு SSN ஆகியவற்றை இந்தப் படையில் இணைப்பதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.