INS இம்பால் (பெண்ணன்ட் D68), 15B திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகின்ற, விசாகப் பட்டினம் ரக ரேடாருக்குப் புலப்படாத வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணை அழிப்புக் கப்பல்களை உள்ளடக்கிய நான்கு போர்க்கப்பல்களில் மூன்றாவது கப்பல் ஆகும்.
இந்த விசாகப்பட்டினம் ரகக் கப்பலானது பிரம்மோஸ் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சீர்வேக ஏவுகணைகள் மற்றும் கடற்கரை மற்றும் கடலில் அமைந்த இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான நீண்ட தூர வரம்புடைய, செங்குத்தாக ஏவப் படக் கூடிய பராக்-8 எனப்படும் நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றினை கொண்டுள்ளன.
2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியக் கடற்படையானது மூன்று கொல்கத்தா ரக வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணை அழிப்புக் கப்பல்களை ‘15A’ என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட திட்டத்தின் கீழ் படையில் இணைத்தது.
கொல்கத்தா ரகக் கப்பல்களில் INS கொல்கத்தா, INS கொச்சி மற்றும் INS சென்னை ஆகியவை அடங்கும்.
இந்தக் கப்பல்கள் INS டெல்லி, INS மைசூர் மற்றும் INS மும்பை ஆகியவற்றை உள்ளடக்கிய அவற்றின் முன்னோடியான டெல்லி ரகக் கப்பல்களை விட ஒரு படி மேலானவை.
அவை திட்டம் 15 என்ற திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டு 1997 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் படையில் இணைக்கப் பட்டன.