TNPSC Thervupettagam

INS வாக்சீர் 2025

January 15 , 2025 2 hrs 0 min 18 0
  • INS வாக்சீர் இந்தியக் கடற்படையில் இணைந்து இருக்கிறது.
  • சாண்ட் ஃபிஸ் எனப்படும் ஆழ்கடலில் வாழும் ஒரு வேட்டையாடும் மீனின் பெயரைக் கொண்டு பெயரிடப்பட்ட INS வாக்சீர், இந்தியாவின் கடற்பரப்பில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் உறுதித் தன்மையினைக் குறிக்கிறது.
  • இது P75 திட்டத்தின் கீழ் தாக்கி-அழிக்கும் வகை நீர்மூழ்கிக் கப்பலாக வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • இது இந்த திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களின் வரிசையில் உருவாக்கப்பட்ட ஆறாவது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலாகும்.
  • இதில் முதல் நீர்மூழ்கிக் கப்பலான INS கல்வாரி, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் படையில் இணைக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து INS காந்தேரி, INS கரஞ்ச், INS வேலா மற்றும் INS வாகீர் ஆகியவை படையில் இணைக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்