TNPSC Thervupettagam

INS – விஷாலில் வானூர்தி செலுத்து அமைப்பு

November 7 , 2017 2576 days 838 0
  • விமானம்தாங்கி கப்பல்களில் இருந்து போர் விமானங்களை வானில் செலுத்த கவண் (catapult) அடிப்படையிலான அமைப்புகளை இந்திய கப்பல்படை பயன்படுத்தவுள்ளது. அமெரிக்க தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான இந்த வானூர்தி செலுத்தும் கவண் அமைப்பினை முற்றிலும் உள்நாட்டில் வடிவமைக்கப்படும் இரண்டாவது இந்திய விமானம்தாங்கி கப்பலான INS விஷாலில் பொருத்தப்படவுள்ளது.
  • விமானம் தாங்கி கப்பல்களில் கேட்டோபார் (CATOBAR) அல்லது இமால்ஸ் (EMALS) அமைப்புகள் பொருத்தப்படும்.
  • CATOBAR என்பது நீராவி ஆற்றலில் கவண்களை இயக்கி வானூர்திகளை வானில் செலுத்தும் தொழில்நுட்பம் ஆகும்.
  • EMALS என்பது மின்காந்த ஆற்றலில் கவண்களை இயக்கி வானூர்திகளை வானில் செலுத்தும் தொழில்நுட்பம் ஆகும்.
  • மின் காந்த ஆற்றலைப் பயன்படுத்துவது கனமான வானூர்திகளை வானில் செலுத்த வகை செய்யும். மேலும், இது வானூர்திகளை செலுத்தும் பொழுது அவற்றின் மீது ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும்.
  • INS விக்ராந்த் வகுப்பில் INS விஷால் அணுசக்தி ஆற்றலில் இயங்கும் கப்பலாகும்.
  • முழுவதும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் விமானம்தாங்கிக் கப்பல் INS விக்ராந்த் ஆகும். 40,000 டன்கள் எடையுள்ள INS விக்ராந்த் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுமானம் முடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படும்.
  • தற்போது இயக்கத்தில் இருக்கும் இந்தியாவின் ஒரே விமானம் தாங்கிக் கப்பலான INS விக்ரமாதித்யாவும், கட்டுமான நிலையில் இருக்கும் INS விக்ராந்தும் STOBAR ( short Take Off-but Arrested Recovery) என்றழைக்கப்படும் மேல்நோக்கி வளைந்த விமான ஓடுபாதை அமைப்பினை கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்