TNPSC Thervupettagam

INS இம்பால் கப்பலை படையில் இணைப்பு

December 29 , 2023 336 days 207 0
  • INS இம்பால் (பெண்ணன்ட் D68), 15B திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகின்ற, விசாகப் பட்டினம் ரக ரேடாருக்குப் புலப்படாத வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணை அழிப்புக் கப்பல்களை உள்ளடக்கிய நான்கு போர்க்கப்பல்களில் மூன்றாவது கப்பல் ஆகும்.
  • இந்த விசாகப்பட்டினம் ரகக் கப்பலானது பிரம்மோஸ் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சீர்வேக ஏவுகணைகள் மற்றும் கடற்கரை மற்றும் கடலில் அமைந்த இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்கான நீண்ட தூர வரம்புடைய, செங்குத்தாக ஏவப் படக் கூடிய பராக்-8 எனப்படும் நிலத்தில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் ஆகியவற்றினை கொண்டுள்ளன.
  • 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், இந்தியக் கடற்படையானது மூன்று கொல்கத்தா ரக வழிகாட்டுதலுடன் கூடிய ஏவுகணை அழிப்புக் கப்பல்களை ‘15A’ என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட திட்டத்தின் கீழ் படையில் இணைத்தது.
  • கொல்கத்தா ரகக் கப்பல்களில் INS கொல்கத்தா, INS கொச்சி மற்றும் INS சென்னை ஆகியவை அடங்கும்.
  • இந்தக் கப்பல்கள் INS டெல்லி, INS மைசூர் மற்றும் INS மும்பை ஆகியவற்றை உள்ளடக்கிய அவற்றின் முன்னோடியான டெல்லி ரகக் கப்பல்களை விட ஒரு படி மேலானவை.
  • அவை திட்டம் 15 என்ற திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்பட்டு 1997 மற்றும் 2001 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் படையில் இணைக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்