உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியக் கடற்படையின் போர் கப்பலான INS கங்கா, முப்பது ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்குப் பிறகு கடற் படையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது (decommissioned).
மசாகான் கப்பல் கட்டும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இக்கப்பல் இந்தியக் கடற்படையின் கோதாவரி – வகுப்பு வழிகாட்டு ஏவுகணைப் போர் கப்பலாகும்.
டிசம்பர் 30, 1995 அன்று இது கடற்படையில் இணைக்கப்பட்டது (Commissioned).
கோதாவரி வகுப்பானது இந்தியக் கடற்படையின் முதல் முக்கியமான, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் கப்பல் மற்றும் மேம்பாட்டுத் தொடக்கமாகும். (Development initiative)
கடற்படைப் போரின் மூன்று விதமான பரிமாணங்களிலும் INS கங்கா, தன்னுடைய திறன்களை வெளிப்படுத்தியுள்ளது.