TNPSC Thervupettagam
October 16 , 2017 2656 days 888 0
  • உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் ரேடாரில் புலப்படா திறனுடைய வழித்துணை (corvette) கப்பலான INS கில்டன் இந்திய கப்பற் படையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • Project 28-ன் கீழ் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டப்படும் 4 கமோர்டா வகுப்பு வழித்துணை கப்பல்களில் INS கில்டன் மூன்றாவது கப்பலாகும்.
  • பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த மினிக்காய் மற்றும் இலட்சத் தீவுகளில் உள்ள அமினித்திவி தீவுக்கூட்டத்தின் ஒரு தீவின் பெயர் இந்தக் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.
  • கார்பன் ஃபைபர் கலப்பு பொருட்களினால் மேற்கட்டுமானமுடைய இந்தியாவின் முதல் முக்கிய போர்க்கப்பல் இதுவாகும் . இத்தகு தொழில்நுட்பத்தால் இது அதிநவீன ரேடாரில் புலப்படா அம்சத்தையும், குறைந்த மேற்பரப்பு எடையையும், குறைந்த பராமரிப்பு செலவையும் உடையது.
  • INS கில்டன் கமோர்டா வகுப்பைச் சேர்ந்த பிற கப்பல்களான INS கமோர்டா, INS காத்மாட் கப்பல்களுக்கும், சிவாலிக் வகுப்பு, மற்றும் கொல்கத்தா வகுப்பு கப்பல்களுக்கும் அடுத்து இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள புதிய உள்நாட்டு தொழில்நுட்பமுடைய போர் கப்பலாகும்.
  • INS கில்டன் மாதிரி ஓட்டமாக அனைத்து முக்கிய ஆயுதங்கள் மற்றும் உணர்விகளுடன் கடற் சோதனையை மேற்கொண்டுள்ள முதல் முக்கிய போர்க்கப்பலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Top